307275891 581343580396434 5424133245012603291 n
எமது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா 21.09.2022 ஆம் திகதி மதியம் 1.30 மணியளவில் எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் இறைவணக்கம் நிகழ்த்தப்பட்டது.
 
அதனை தொடர்ந்து எமது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளரினால் வரவேற்புரையும் பிரதேச செயலாளரினால் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது.
 
தொடர்ந்து எமது அலுவலகத்தில் கடமைபுரிந்து ஓய்வூதியம் பெற்ற அலுவலர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற அலுவலர்களுக்கான வாழ்த்துரை பதவிநிலை உத்தியோகத்தர்களினாலும் மற்றும் பிரதேச செயலக அலுவலர்களினாலும் நிகழ்த்தப்பட்டது.
 
தொடர்ந்து ஓய்வூதியம் பெற்ற அலுவலர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற அலுவலர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் அவர்களின் ஏற்புரை இடம்பெற்றது.
 
இறுதி நிகழ்வாக ஊழியர் நலன்புரி சங்க உப செயலாளரினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
 
304872375 581345297062929 376113608351338049 n   304872375 581345297062929 376113608351338049 n   305021774 581343650396427 4256686041445206355 n
 
305979783 581345287062930 296360132486890122 n   306741588 581345163729609 6023782515619602105 n   307167140 581344947062964 461780681928386340 n
 

News & Events

07
සැප්2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
අගෝ2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
අගෝ2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
අගෝ2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »
Scroll To Top