மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் 2026 ம் ஆண்டு மாகாண குறித் தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) வேலைத்திட்டத்தின் கீழ் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் உரும்பிராய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் 07.07.2026, 08.07.2026 ஆகிய இரு நாட்கள் காலை 9.00 மணி தொடக்கம் 3.00 வரை பப்பட உற்பத்தி பயிற்சி நெறியானது சிறப்பாக நடைபெற்றது. உரும்பிராய் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் பிரதேச தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வின் வளவாளராக மாவட்ட விதாத உத்தியோகத்தர் திருமதி கோமதி மாயக்கிருஷ்ணன் (விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அப் பிரிவு கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் 25 தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இத் தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சி நெறியில் சாதாரண பப்படம், மிளகு பப்படம், சீரக பப்படம், முருங்கை கீரை பப்படம், சங்குப்பூ பப்படம் போன்ற பலவகையான பப்படங்கள் உற்பத்திக்கான பயிற்சிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
<














