நேர்மையான அரச சேவைக்கான "நேர்மை கலாசாரம் -கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் ஐந்தாம் நாளான இன்று (2026.07.31) சுற்றாடல் வளமுகாமைத்துவ கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மையை மேம்படுத்தும் நாளாக பிரகடனப்படுதத்ப்பட்டுள்ளது. இத் தினத்தில் யா/ உரும்பிராய் சந்திரோதயா வித்தியாலய பாடசாலையில் பழ மரக்கன்றுகள் நடுகை நிகழ்வும் அத்துடன் இணைந்து "நிலையான நேர்மை மிக்க பசுமைக் கலாசாரம்" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வும் இடம் பெற்றது இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள்.
<














