

பாதீனியக் களைக் கட்டுப்பாட்டு நடவடிக்கை - 2026
பாத்தீனிய களைக்கட்டுப்பாட்டு தினமான நேற்று (30.06.2026) எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட J/262 ,J/ 263, J/ 264,
J/265 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் பாதீனியக் களைக் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1) கோப்பாய் வடக்கு (J/262 ) :- சரவணபவானந்தா பாடசாலை வீதி
2) உரும்பிராய் மேற்கு (J/263 ) :- யா/உரும்பிராய் சந்திரோதயா வித்தியாலயம்.
3) உரும்பிராய் வடக்கு (J/264 ) :- அண்ணமார் கோவிலடி வீதி.
4) உரும்பிராய் தெற்கு (J/265 ) :-சேமப்புல வீதி , யோகபுர முன்பள்ளி.
இந்நிகழ்வானது காலை 8.00 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின் போது சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மருத்துவர் (சித்த), கிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி சமூக அபிவிருத்தி சபை தலைவர்கள், உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்புக்கள், விவசாய போதனா ஆசிரியர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பாதீனிய களை அகற்றும் நடவடிக்கையை முறையாக மேற்கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள்.














