வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் யாழ் மாவட்டத்திற்குட்பட்ட நெசவுப் போதனாசிரியர்கள், நெசவாளர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் பயிற்றுவிப்பாளர் கள்(TOTs) போன்ற 20 பங்குபற்றுனர்களுக்கு Norway design நெசவு தொடர்பான விசேட பயிற்சியானது கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுப்பிட்டி நெசவு நிலையத்தில் பிரதேச தொழிற்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பமாகி 4 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இப் பயிற்சி கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பயிற்றுவிப்பாளர் குழாமினால் வடிவமைக்கப்பட்டு சிறப்பான வகையில் பயிற்சியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
<
<














