சனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளைப் பிரதேச மட்டத்திற்கு பரவலாக்கியமைக்காக மூன்றாம் இடத்தை கோப்பாய் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது. சனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளைப் பிரதேச மட்டத்திற்கு பரவலாக்கியமைக்காக சிறப்பாகச் செயற்பட்ட பிரதேச செயலகங்களை மதிப்பீடு செய்து, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிரதேச செயலகங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு 26.09.2026 அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தை நல்லூர் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை தென்மராட்சி பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை கோப்பாய் பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (டாக்டர்) செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது குறித்த பிரதேச செயலாளர்கள் மற்றும் சனாதிபதி நிதியத்தின் பிரதேச விடய உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் சனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ரொஷான் கமகே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. விமல் சாமிநாதன், வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

1 1 

1 1 <

News & Events

07
ඔක්2026
 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை வலிகாமம் கிழக்கு , கோப்பாய் பிரதேச செயலகம் பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், எமது பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் (IAU) முறைப்பாட்டு பொறிமுறை நடைமுறையில் உள்ளது. 👉 அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் 👉 ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சந்தேகங்கள் 👉அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள் 👉வேறு...

01
ඔක්2026
இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

நீண்ட ஆயுளின் யுகத்தில் நீண்ட காலம் வாழும் மக்களுக்கேற்ப அமைப்புக்களை மறுசிந்தனை செய்தல். "உள்ளூர் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளை உந்தி தள்ளும் முதியவர்கள்: எமது லட்சியங்கள், எமது நல்வாழ்வு, எமது உரிமைகள்"

« »
Scroll To Top