எமது வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ள உள் விவகார அலகின் நோக்கம்,அதன் செயற்பாடுகள்,அவ்வலகின் பொறுப்புமிக்க அதிகாரிகள் குழு,அவர்களால் ஆற்ற வேண்டிய பணிகள்,அப் பணிகளுக்கு கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஆற்றவேண்டிய விசேட கடமைகள் தொடர்பாக உள் விவகார அலகின் பயிற்சி பெற்ற நேர்மை அலுவலர் மற்றும் விடய அலுவலரால் 05.10.2026 ஆம் திகதி பி.ப 2.20 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் எடுத்துக்காட்டுக்களுடனான விளக்கவுரை வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
<
<














