2026 ம் ஆண்டிற்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐப்பசி 09 மற்றும் 13 ம் திகதிகளில் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் கோப்பாய் பிரதேச செயலகம் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. இப்போட்டிகளில், மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் கோப்பாய் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இவ் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், சமூக சேவைகள் உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர், மாற்றுத்திறனாளிகளான விளையாட்டு வீர வீராங்கனைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
<














