கோப்பாய் பிரதேச செயலகத்தில் வசிக்கும் உடல்நிறைசுட்டி குறைவாகவுள்ள போஷாக்கு குறைபாடுடைய விசேட தேவையுடைய 10 பிள்ளைகளுக்கு 4ஆம் கட்டமாக போசாக்கு உலர் உணவு பொதி 10.09.2026 திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது. இத் திட்டமானது தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இதற்கான பயனாளிகள் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தெரிவு செய்யப்பட்டு சமூக சேவை உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடன் வலி கிழக்கு தென்பகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக பெற்று வழங்கி வைக்கப்படுகிறது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை கிளை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
<














