மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் Fair med நிறுவனத்தின் அனுசரணையுடன் உடுவில் பிரதேச செயலகத்துடன் இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026 ஆம் திகதி அன்று காரைநகர் கசூரினா கடற்கரை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் முதியோர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தமது திறன்களை வெளிப்படுத்தியதுடன் விளையாட்டுக்களிலும் பங்கு பற்றி மகிழ்ந்தனர். இந்நிகழ்வு சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை கிளை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது
<
<














