பயனாளிகளினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கேற்ப வைத்திய அதிகாரியின் சிபாரிசுடன் மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன. இதில் சாதாரண சற்கரநாற்காலி, நடைச்சட்டகம், ஊன்றுகோல் விசேட இயங்கு திறன் கூடிய சற்கரநாற்காலி என்பன வழங்கி வைக்கப்பட்டன. இத்துடன் வருமானம் குறைந்த நபர்களுக்கான மூக்கு கண்ணாடி, காது கேட்கும் கருவி, செயற்கை அவயம் பொருத்துதல், மூன்று சில்லு வண்டி, கழிவுக்கல நாற்காலி, படுக்கையில் உள்ள விசேட தேவையுடையவர்களுக்கான கட்டில், மெத்தை போன்ற உபகரணங்களும் சமூக சேவைகிளையினால் வழங்கி வைக்கப்படுகிறது.
<














