வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் யாழ் மாவட்டத்திற்குட்பட்ட நெசவுப் போதனாசிரியர்கள்,நெசவாளர்கள் ஆகிய 22 பங்குபற்றுனர்களுக்கு 4 நாட்கள் கொண்ட (paddy Seed design)நெசவு அபிவிருத்தி தொடர்பான விசேட பயிற்சியானது கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுப்பிட்டி நெசவு நிலையத்தில் 05.10.2026 - 08.10.2026 வரை சிறப்பாக நடைபெற்றது. இப் பயிற்சி கொழும்பில் இருந்து வருகை தந்த Sri Lanka Institute of Textile & Apparel விசேட பயிற்றுவிப்பாளர் குழாமினால் வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
<














