தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடாத்தப்பட்ட உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 விசேட திறமை மற்றும் திறமை விருதுகள் வழங்கும் விழா இன்றைய தினம் (27.10.2026) கிளிநொச்சி ஆர்.எஸ்.கிரீன் பாரதி ரிசார்ட் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எமது பிரதேச செயலகத்திற்கு விசேட திறமைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த அடைவு மட்டத்தினைப் பெறுவதற்காக அர்ப்பணிப்புடன் வழிப்படுத்தி ,நெறிப்படுத்திய பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கும் அவர்களுடன் இணைந்து பாடுபட்ட பணிக்குழுவினர் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்ளும் பாராட்டுக்களும்.

<














