யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சர்வதேச முதியோர், மாற்றுவலுவுடையோர் தின விழா நேற்றைய தினம் (29.10.2026)நடைபெற்றது. இந் நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகையில் சிறந்த உத்தியோகத்தர்களுக்கான பாராட்டு வழங்கப்பட்டது. சமூக சேவைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை மதிப்பீட்டில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற உத்தியோகத்தர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் முதலாம் இடத்தினை எமது பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமூக சேவை கிளை ) திருமதி வி. கிரிஷ்சாந்தி அவர்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.














