கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டமான இன்று (19.09.2026) சர்வதேச கரையோரத்தை தூய்மைப்படுத்தும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தினத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் வளலாய் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள வளலாய் கடற்கரையோரத்தில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் நிர்வாகக் கிராம அலுவலர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அச்சுவேலி , கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள், வான்படை இராணுவத்தினர்- கிளிநொச்சி, பிரதேச சபை ஊழியர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள் மற்றும் பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள்
<
<














