நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
<














