இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சமூகப் பாதுகாப்பு விருது – 2025 வழங்கும் நிகழ்வு (30.09.2026) புதன்கிழமை வவுனியாவில் அமைந்துள்ள செல்வஜீவிதம் மண்டபத்தில் நடைபெற்றது. 2025ம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளது. பிரதேச செயலாளர்- திரு.ஈ.தயாரூபன், உதவிப்பிரதேச செயலாளர்- திருமதி.ச.அபர்ணா, சமூகப் பாதுகாப்புச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர்- திரு .க.வருணதாஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் - செல்வி.தி.மரியகொண்சலீனா அவர்களுக்கும் கிடைக்கப் பெற்றதுடன் தனிநபர் ரீதியிலான எமது பிரதேச செயலக சமூகப் பாதுகாப்புச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு .க.வருணதாஸ் அவர்கள் பணச்சேகரிப்பு தேசியரீதியில் முதலாம் இடத்தினையும் அத்துடன் திருமதி.பி.தேனுஜா-கிராம அலுவலர், திரு.செ.கார்த்தீபன்-கிராம அலுவலர், திருமதி.நி.பிரியதர்சினி- கிராம அலுவலர், திரு.ந.தனுஷன் கிராம அலுவலர், திருமதி.க.குணசீலி-கிராம அலுவலர், திரு.இ.அன்ரன்தீபராஜ் -கிராம அலுவலர், ஆகியோரும் தேசிய மட்ட விருதுகள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ் இலக்கினை அடைவதற்கு கிராம சேவையாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உதவிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
<
<














