278585923 477084240822369 5216254491758731497 n

பிறந்துள்ள சுபகிருது சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டிற்கான வேலை நாளின் ஆரம்பத்திற்காக இன்று காலை சுப நேரத்தில் 9.05 மணியளவில் எமது அலுவலகத்தில் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளரால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று தொடர்ந்து விசேட பூஜை வழிபாடு செல்வ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.

பிற்பகல் 1.30 மணியளவில் எமது பிரதேச செயலக வளாகத்தில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோலம்போடுதல், மாலை கட்டுதல், கிடுகு பின்னுதல், தேங்காய் திருவுதல், குருட்டு யானைக்கு கண் வைத்தல், முட்டி அடித்தல், நீர் நிரப்பிய பலூன் எறிந்து ஏந்துதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டு இந்நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது.
 
278663506 477084274155699 3072393100709308303 n 278752493 500081728512365 7553519056829324166 n 278711316 500097515177453 3252209145177709785 n 278399695 500097541844117 4914248292523342627 n 278225683 500098551844016 2685567240378803296 n 278387972 500098821843989 6921939263334249698 n

News & Events

22
ඔක්2026
மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் கோப்பாய் பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு அவர்களின் நாளாந்த கடமைகளை தாமே மேற்கொள்ளக் கூடிய வகையிலும் அவர்களது இயலாமையினைக் குறைக்க கூடிய வகையிலும் பொருத்தமான உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் கோப்பாய் பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு அவர்களின் நாளாந்த கடமைகளை தாமே மேற்கொள்ளக் கூடிய வகையிலும் அவர்களது இயலாமையினைக் குறைக்க கூடிய வகையிலும் பொருத்தமான உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

பயனாளிகளினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கேற்ப வைத்திய அதிகாரியின் சிபாரிசுடன் மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன. இதில் சாதாரண சற்கரநாற்காலி, நடைச்சட்டகம், ஊன்றுகோல் விசேட இயங்கு திறன் கூடிய சற்கரநாற்காலி என்பன வழங்கி வைக்கப்பட்டன. இத்துடன் வருமானம் குறைந்த நபர்களுக்கான மூக்கு கண்ணாடி, காது கேட்கும் கருவி, செயற்கை அவயம் பொருத்துதல், மூன்று சில்லு வண்டி, கழிவுக்கல நாற்காலி, படுக்கையில் உள்ள விசேட தேவையுடையவர்களுக்கான கட்டில், மெத்தை போன்ற உபகரணங்களும் சமூக சேவைகிளையினால்...

22
ඔක්2026
கல்வி பயிலும் விசேட தேவை உடைய பிள்ளைக்கு தேவையான பம்பஸ் வழங்கி வைத்தல்.

கல்வி பயிலும் விசேட தேவை உடைய பிள்ளைக்கு தேவையான பம்பஸ் வழங்கி வைத்தல்.

நன்கொடையாளர் ஒருவரின் அன்பளிப்பில் விசேட தேவையுடைய பாடசாலை கல்வியினை தொடங்கும் பிள்ளைக்கு உதவி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் சமூக சேவை உத்தியோகத்தர் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

22
ඔක්2026
முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026

முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் Fair med நிறுவனத்தின் அனுசரணையுடன் உடுவில் பிரதேச செயலகத்துடன் இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026 ஆம் திகதி அன்று காரைநகர் கசூரினா கடற்கரை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் முதியோர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தமது திறன்களை வெளிப்படுத்தியதுடன் விளையாட்டுக்களிலும் பங்கு பற்றி மகிழ்ந்தனர். இந்நிகழ்வு சமூக சேவை உத்தியோகத்தர்...

« »
Scroll To Top