வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச தொழிற்துறைத் திணைக்கள உத்தியோகத்தர் ஒழுங்கமைப்பில் உரும்பிராய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் 14.07.2026, 17.07.2026 ஆகிய இரு நாட்கள் காலை 9.00 மணி தொடக்கம் 3.00 வரை உணவு உற்பத்தி பயிற்சி நெறியானது சிறப்பாக நடைபெற்றது. உரும்பிராய் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் பிரதேச தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வின் வளவாளராக மாவட்ட விதாதா உத்தியோகத்தர் திருமதி கோமதி மாயக்கிருஷ்ணன் ( விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அப் பிரிவு கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச விதாதா வள நிலைய உத்தியோகத்தர் மற்றும் 12 தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இத் தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சி நெறியில் கச்சான் அலுவா, எள் அலுவா, சோளன்மா தொதல், பூந்தி, பனீர், அரிசி சேர் மிக்சர், அரிசி சேர் ரொபி போன்ற பலவகையான உணவு உற்பத்திக்கான பயிற்சிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
<














