வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் யாழ் மாவட்டத்திற்குட்பட்ட நெசவுப் போதனாசிரியர்கள்,நெசவாளர்கள் ஆகிய 22 பங்குபற்றுனர்களுக்கு 4 நாட்கள் கொண்ட (paddy Seed design)நெசவு அபிவிருத்தி தொடர்பான விசேட பயிற்சியானது கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுப்பிட்டி நெசவு நிலையத்தில் பிரதேச தொழிற்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் இன்று ஆரம்பமாகியது. இப் பயிற்சி கொழும்பில் இருந்து வருகை தந்த Sri Lanka Institute of Textile & Apparel விசேட பயிற்றுவிப்பாளர் குழாமினால் வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
<














