இலங்கை அரச சட்டக் கோவையின் இலஞ்சம் ஊழல் தொடர்பான குறித்தொதுக்கப்பட்ட சட்டச் சரத்துக்கள் அதில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பங்கு,குற்றம் சாட்டப்பட்ட அரச சேவையாளர்களுக்கான தண்டனையின் வகைப்பாடுகள் தொடர்பாக விளக்க மளிக்கும் பயிற்சி நெறி நேற்றைய தினம் 04.11.2026 காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் வளவாளராக திருமதி விமல்சினி நிமல்ராஜ் சட்டத்தரணி, பருத்தித்துறை அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அண்மையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் சுற்றறிக்கைக்கமைய எமது பிரதேச செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உள்விவகார அலகின் செயற்பாடுகளை தெளிவான முறையில் இவ் அலகிலுள்ள உத்தியோகத்தர்கள் ஆற்றுவதற்கு இந்த செயன்முறை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
<














