பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் ஊழல் ஒழிப்புத் தொடர்பான இலங்கை சட்டக் கோவையின் உறுப்புரைகள் அவற்றில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விடயங்கள் தொடர்பாக விளக்க மளிக்கும் பயிற்சி நெறி இன்று 04.11.2026 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இப் பயிற்சி நெறியில் வளவாளராக திருமதி.துசானி சயந்தன் சிரேஷ்ட விரிவுரையாளர், சட்டத்துறை, பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். பிரதேச செயலகத்தால் வழங்கப்படுகின்ற பொதுமக்கள் சேவையுடன் தொடர்படுத்தப்பட்ட வகையில் இலஞ்சம் ஊழல் இடம்பெறுவதற்கு வாய்ப்பாக இனங்காணப்படும் சந்தர்ப்பங்கள் பற்றியும் , அவற்றினைத் தவிர்த்து வெளிப்படையான பொதுமக்கள் சேவை எவ்வாறு ஆற்றலாம் என்பது பற்றியும், மேற்படி குற்றங்களில் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முறைகள் பற்றியும் பொருத்தமான எடுத்துக்காட்டுக்கள் உதாரணங்களுடனான சட்டத்தின் சரத்துக்கள் மற்றும் உறுப்புரைகளுடன் இணைந்த வகையில் சிறப்பான பயிற்சி நெறி விரிவுரையாளரால் நடாத்தப்பட்டது.
<














