36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் தேசிய மட்ட கடற்கரைக் கரப்பந்தாட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ள, சஞ்சய் சுதர்ஷன் ஆகிய இரு வீரர்களுக்கும் கோப்பாய் பிரதேச செயலாகத்தை பிரதிநிதி படுத்தி யாழ் மாவட்டம் சார்பாக ஆவரங்கால் மேற்கு இளைஞர் கழகத்தில் இருந்து பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. கோப்பாய் பிரதேச செயலகம் மற்றும் கோப்பாய் இளைஞர் கழக பிரதேச சம்மேளனமும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிந்துக் கொள்கின்றது. தேசிய மட்டத்தில் தமது திறமையை வெளிப்படுத்தி யாழ். மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. இச்சாதனைக்காக வீரர்கள் இருவரையும் வழிநடத்திய பயிற்றுருக்கும் எமது பாராட்டுகள். இன்னும் பல வெற்றிகளைப் பெற்று உயர வாழ்த்துகள்!
கோப்பாய் பிரதேச செயலகம்,
கோப்பாய் இளைஞர் கழக பிரதேச சம்மேளனம்.

<














