Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
க.பொ.த(சா/த) மாணவர்களிற்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி

UNDP நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் CFCD நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட க.பொ.த(சா/த) மாணவர்களிற்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியானது 08.11.2022 ஆம் திகதி யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது.

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கலந்துரையாடல்

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கலந்துரையாடல் பிரதேச செயலாளர் தலைமையில் 28.09.2022 ஆம் திகதி காலை 10 மணியளவில் புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோப்பாய் கோட்ட மட்ட அதிபர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர்(முறைசாராப் பிரிவு), சிறுவர் இல்லங்களின் முகாமையாளர், தொழிற்திணைக்கள அலுவலர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

கா.பொ.த சாதாரண தர இடைவிலகிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டம்
எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கா.பொ.த சாதாரண தர இடைவிலகிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டமானது உதவி பிரதேச செயலாளர் தலைமையில் 22.09.2022 ஆம் திகதி எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் வளவாளராக மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
சேவை நலன் பாராட்டு விழா

எமது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா 21.09.2022 ஆம் திகதி மதியம் 1.30 மணியளவில் எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் இறைவணக்கம் நிகழ்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து எமது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளரினால் வரவேற்புரையும் பிரதேச செயலாளரினால் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து எமது அலுவலகத்தில் கடமைபுரிந்து ஓய்வூதியம் பெற்ற அலுவலர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற அலுவலர்களுக்கான வாழ்த்துரை பதவிநிலை உத்தியோகத்தர்களினாலும் மற்றும் பிரதேச செயலக அலுவலர்களினாலும் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து ஓய்வூதியம் பெற்ற அலுவலர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற அலுவலர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் அவர்களின் ஏற்புரை இடம்பெற்றது.
இறுதி நிகழ்வாக ஊழியர் நலன்புரி சங்க உப செயலாளரினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.



























