Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
மகளிர் அபிவிருத்தி நிலைய வருடாந்த கண்காட்சி - 2021

வடக்கு மாகாண அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் நடாத்தப்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலைய வருடாந்த கண்காட்சி 03.03.2021 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் மு.ப 9.15 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் தலைவராக எமது பிரதேச செயலாளர் திருமதி.சுபாஜினி மதியழகன் அவர்களும் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.நளாயினி இன்பராஜ் (பணிப்பாளர், வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம்) மற்றும் திரு,ந.பஞ்சலிங்கம் (மாவட்ட உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி திணைக்களம்) ஆகியோரும் கலந்து இவ் விழாவினை சிறப்பித்திருந்தனர்.
இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில...



73 வது சுதந்திர தினம்- 2021

73 வது சுதந்திர தினம் 2021.02.04 ம் திகதி காலை 8.30 மணியளவில் எமது பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது. பிரதேச செயலாளாினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடா்ந்து அகவணக்கமும், பிரதேச செயலாளாினால் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியும், மரம் நாட்டுகையும், சிரமதானமும் இடம்பெற்றது.

பட்டதாரி / டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் - 2020 - இரண்டாம் கட்டம்

பட்டதாரி / டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் - 2020 - இரண்டாம் கட்டமாக 01.02.2021 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட 24 பயிளுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில



பிரிவுபசார விழா - 2021

எமது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட பிரிவுபசார விழா 29.01.2021 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2 மணியளவில் எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் எமது அலுவலகத்தில் கடமைபுரிந்து கடந்த ஆண்டு ஓய்வூதியம் பெற்ற அலுவலர்களையும் மற்றும் ஏனைய பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற அலுவலர்களையும் கௌரவிக்கும் முகமாக இந்நிகழ்வு நடைபெற்றது.
இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில





























