வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச தொழிற்துறைத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒழுங்குபடுத்தலில் உங்கள் தொழிலை முன்னேற்றுங்கள் (Improve your business - IYB) பயிற்சி நெறி யானது 1. சந்தைப்படுத்தல் 2. வாங்குதல் 3. சரக்கு கட்டுப்பாடு 4. பதிவேடுகளைப் பேணுதல் 5. செலவுக் கணக்கீடு மற்றும் தொழில் திட்டமிடல் போன்ற தொழில் முன்னேற்றத்திற்கு அடிப்படையான பாடத் திட்டங்களை உள்ளடக்கி வியாபார விளையாட்டுக்களுடன் 5 நாட்கள் (19.10.2026 - 23.10.2026) கோப்பாய் பிரதேசத்திற்குட்பட்ட வளர்ந்து வரும் 16 தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. உங்கள் தொழிலை முன்னேற்றுங்கள் (IYB) பயிற்சி நெறியின் வளவாளர்களாக திருமதி வாசுகி அறிவழகன் (SIYB Trainer) மற்றும் திரு J. சதீசன் (SIYB Trainer) ஆகியோர் செயற்பட்டனர். அதன் பதிவுகள்....
<














