
உள்விவகாரப் பிரிவின் முதன்மை நோக்கங்கள்(Key Objectives of the Internal Affairs Unit)உள்விவகாரப் பிரிவின் பொறுப்புகளும் செயற்பாடுகளும் (Responsibilities & Functions of the Internal Affairs Unit)
உள்விவகாரப் பிரிவின் முதன்மை நோக்கங்கள் (Key Objectives of the Internal Affairs Unit)
1. நிறுவனத்தில் ஊழலைத் தடுத்தல் மற்றும் நேர்மையான கலாச்சாரத்தை வளர்த்தல்.
(Prevent corruption in the institution and cultivate a culture of integrity.)
2. நிறுவனத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்தல் மற்றும் நிறுவன நடைமுறைகள், முடிவுகள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் பெறுவதை உறுதிசெய்தல்.
(Ensure transparency and accountability in all activities of the institution and ensure public access to information regarding institutional practices and decisions.)
3. நிறுவனத்திற்குள் நெறிமுறை சார்ந்த ஆளுகையை (Ethical Governance) மேம்படுத்துதல்.
(Promote ethical governance within the institution.)
4. தவறான நடத்தைகள்/முறைகேடுகள் பற்றிய புகார்களை ஊக்குவிப்பதற்கும், தகவலறிவிப்போரைப் (Whistleblowers) பாதுகாப்பதற்கும், ரகசியத்தன்மையைப் பேணவதற்கும் பாதுகாப்பான மற்றும் எளிதில் அணுகக்கூடிய அமைப்பை உருவாக்குதல்.
(Develop a secure and accessible system to encourage reporting misconduct, protect whistleblowers and maintain confidentiality.)
5. சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்கள் மற்றும் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் (CIABOC) இணைந்து பணியாற்றுவதன் மூலம் சட்ட அமலாக்கத்திற்கு ஆதரவளித்தல்.
(Support legal enforcement through collaboration with law enforcement agencies and the Commission to Investigate Allegations of Bribery or Corruption - CIABOC.)
உள்விவகாரப் பிரிவின் பொறுப்புகளும் செயற்பாடுகளும்
(Responsibilities & Functions of the Internal Affairs Unit)
1. முறையான தடைகளைக் கண்டறிந்து எளிமைப்படுத்தல்:
நிறுவனத்தின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக, தற்போதைய நடைமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை ஆராய்ந்து நிறுவனத்திற்குள் காணப்படும் முறையான தடைகளைக் (Systemic Bottlenecks) கண்டறிந்து அவற்றை எளிமைப்படுத்தல்.
2. ஊழல் அபாய மதிப்பீடுகளை (CRAs) நடத்துதல்:
நிறுவனத்தில் ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தைகளுக்கு வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் காண ஊழல் அபாய மதிப்பீடுகளை (Corruption Risk Assessments - CRAs) நடத்தி, இலக்கு வைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தல்.
3. நிறுவன நேர்மைச் செயற்திட்டத்தை உருவாக்குதல்:
நிறுவனத்தின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட ஊழல் எதிர்ப்பு நோக்கங்கள் மற்றும் உத்திகளை உள்ளடக்கிய 'நிறுவன நேர்மைச் செயற்திட்டத்தை' (Institutional Integrity Action Plan) உருவாக்கி நடைமுறைப்படுத்துதல்.
4. தேசிய ஊழல் எதிர்ப்பு இலக்குகளுடன் இணங்குதல்:
நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை 'தேசிய ஊழல் எதிர்ப்புச் செயற்திட்டத்திற்கு' அமைவாக ஒருங்கிணைப்பதன் மூலம் தேசிய ஊழல் எதிர்ப்பு இலக்குகளுக்கு முழுமையான இணக்கப்பாட்டை உறுதிசெய்தல்.
5. வழமையான இணக்கப்பாட்டு ஆய்வுகளை மேற்கோள்ளல்:
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் உட்பட, தேசிய மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்புச் சட்டங்களுக்கு நிறுவனம் கீழ்ப்படிந்து நடப்பதை மதிப்பீடு செய்வதற்கும், மேம்படுத்தப்பட வேண்டிய பகுதிகளைக் கண்டறிவதற்கும் வழக்கமான இணக்கப்பாட்டு ஆய்வுகளை (Compliance Reviews) நடத்துதல்.
6. சொத்துக்கள் அறிவிப்பு மற்றும் நலன்சார் முரண்பாடுகளை முகாமைத்துவம் செய்தல்:
அனைத்துப் அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான சொத்துக்கள் அறிவித்தல் (Asset Declaration) தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்தல்; மேலும் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) விதிகளுக்கும் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கும் அமைவாக நலன்சார் முரண்பாடுகளை (Conflicts of Interest) முகாமைத்துவம் செய்தல்.
7. புகார்களைப் பெறுவதற்கும் கையாளுவதற்கும் பாதுகாப்பான அமைப்பை நிறுவுதல்:
நிறுவனத்தில் இடம்பெறும் ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தைகள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கும் முகாமைத்துவம் செய்வதற்கும் ஒரு பாதுகாப்பான அமைப்பை நிறுவுதல்; அத்தகைய அனைத்து புகார்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது பிரிவுகளால் உடனடியாகக் கையாளப்படுவதை உறுதிசெய்தல்; வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழக்கமான பின்னூட்டங்களை வழங்குதல். தேவைப்படின், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக தொடர்புடைய உண்மைகள், கண்டுபிடிப்புகள் அல்லது தகவல்களை CIABOC க்கு அனுப்பி வைத்தல்.
8. பிரஜைகள் சாசனத்தை (Citizen’s Charter) வெளியிட்டு நடைமுறைப்படுத்தல்:
நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகளை தெளிவுபடுத்தும் பிரஜைகள் சாசனத்தை உருவாக்கி வெளியிடுதல்.
9. நெறிமுறை ஆளுகைக் கொள்கைகளை அமல்படுத்தல்:
அரச அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய தரப்படுத்தப்பட்ட நடத்தைக்கட்டுப்பாட்டு விதிகள் (Code of Conduct) உட்பட, நெறிமுறை சார்ந்த ஆளுகையை மேம்படுத்தும் கொள்கைகளை நிறுவி நடைமுறைப்படுத்துதல்.
10. விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்களை நடாத்துதல்:
ஊழியர்களை ஊழல் எதிர்ப்புத் தத்துவங்களுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி அளித்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்.
11. தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மை மதிப்பீட்டுக்கான ஒருங்கிணைப்பு மையமாகச் செயற்படுதல்:
CIABOC மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்பு அமைப்பின் வழிகாட்டுதலின்படி, நிறுவனம் நேர்மை மதிப்பீட்டுச் செயல்முறைகளில் பங்கேற்பதையும் அதற்கு அமைவாகச் செயற்படுவதையும் உறுதிசெய்து, தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மை மதிப்பீட்டிற்கான (National Anti-Corruption Integrity Assessment) நிறுவனத்தின் முதன்மை மையமாகச் (Focal Point) செயற்படுதல்.
12. CIABOC உடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுதல்:
இப்பிரிவின் கடமைகளை நிறைவேற்றுவதில் தொடர்ச்சியான வழிகாட்டுதலையும் ஆதரவையும் பெறுவதற்காக லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் (CIABOC) நெருங்கிய தொடர்பைப் பேணுதல்.
13.காலமுறை மற்றும் வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்:
உள்விவகாரப் பிரிவின் (IAU) செயல்பாடுகள், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் முன்னேற்றம், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளைத் தொகுத்து காலமுறை மற்றும் வருடாந்த அறிக்கைகளை தயாரித்தல்.
14.தனியார் துறையினருடன் இணைந்து பணியாற்றுதல்:
நேர்மை மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்குத் தனியார் துறைப் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுதல்















