
Management Competition For Grama Niladhari Division 2020 இல் முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட எமது பிரதேச செயலக கிராம அலுவலர்களுக்கு எமது பாராட்டுக்கள்.

எமது பிரதேச செயலகத்தில் எமது அலுவலர்களின் நலன் கருதி கணனி மூலமான கண் பரிசோதனை நிகழ்வு இன்று (15.12.2021) நடைபெற்றது.

இது தொடர்பான பதிவுகள் சில:

Lions Clubs International Foundation இனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறுமை கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கான ரூபா. 2000 பெறுமதியான உலர் உணவு வழங்கல் நிகழ்வு எமது பிரதேச செயலகத்தில் 06.12.2021 ஆம் திகதி நடைபெற்றது.


திறன் அபிவிருத்தி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் 2020 ஆம் ஆண்டிற்கான பிரதேச செயலகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித் தொடரில் வலிகாமம் கிழக்கு - கோப்பாய் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய உடற்தகுதி திட்டம் (பயிற்சியாளர்களுக்கான பட்டறை) இன் இரண்டாம் நாள் நிகழ்வில் யோகா பயிற்சி பட்டறை 30.11.2021 ஆம் திகதி எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பான பதிவுகள் சில :















