
தேசிய ரீதியில் ஆவரங்கால், கோப்பாய் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வங்கிச் செயற்பாட்டில் Manual வேலையினை நிறுத்தி online மூலம் பொதுமக்களுக்கான சேவை வழங்குவதில் ஆவரங்கால் மற்றும் கோப்பாய் வங்கிகள் தெரிவு செய்யப்பட்டமைக்காக உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 08.11.2022 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச்செயற்பாட்டினைச் சிறப்பாக நிறைவேற்றிய வங்கி முகாமையாளர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


UNDP நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் CFCD நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட க.பொ.த(சா/த) மாணவர்களிற்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியானது 08.11.2022 ஆம் திகதி யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது.

























