banner
நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் 4 மணிவரை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந் நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்தார்.
 
மேலும், இந் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ள திணைக்களங்களும் அவற்றின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளும் வருமாறு:
 

திணைக்களங்கள்

 சேவைகள்

ஆவண விபரங்கள்

1.

நீதி அமைச்சின் - தொழிலாளர் தீர்ப்பாயம்,சமாதான நீதவான், தீடீர் மரண விசாரணை,
சத்திய பிரமாணத்திற்கான ஆணையாளர்,அகில இலங்கை மொழிபெயர்ப்பாளர் தொடர்பான சேவைகள்.

* தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிணக்குகள்

 வெளிநாட்டு அமைச்சின் மூலமான சத்தியபிரமாண சான்றளிப்பு pdfic2

2

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்

*  காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட முடியும்.

* காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான புதிய முறைப்பாடுகளை மேற்கொள்ள முடிவதுடன்,காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்கமுடியும்

 

3

சட்ட உதவி ஆணைக்குழு

* நிலுவையிலிருக்கும் ஏதேனும் வழக்குகள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

* ஏதேனும் வழக்கு ஒன்றை தொடர்வதற்கான சட்டத்தரணிகளின் சேவையினை பெற்றுக்கொள்ளல்.

 

4

இழப்பீட்டுக்கான அலுவலகம்
 

* புனர்வாழ்வு அதிகாரசபைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட பொதுமக்கள் சொத்திழப்பு, இறப்பு மற்றும் காயம் தொடர்பான கோவைகள், அரசாங்க ஊழியர் சொத்திழப்புக்குரிய கோவைகள் மற்றும் போரினால் சேதமடைந்த ஆலயங்களின் கோவைகள் தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட இதுவரை இழப்பீட்டை பெற்றுக்கொள்ளாதவர்களும்  மேலதிகமாக இவ் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்

* சுயதொழில் திட்டப் பயிற்சிநெறிகள்  தொடர்பான விபரங்களை இந் நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ளலாம்.

  pdfic2

5

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்

* இந் நிறுவனத்தினால் விழிப்புணர்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் சம்மந்தமான  செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

6

குற்றம் மற்றும் சாட்சியங்களினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதிகாரசபை
 

* குற்றச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சியங்கள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகளைப்  பெற்றுக்கொள்ளவதற்கான விசேட சாளரமொன்று திறக்கப்பட்டுள்ளதுடன்  அதற்கமைய அவர்கள் தமது பிரச்சினைகளை இவ்விடத்தில் முன்வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

* இத்திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 pdfic2

7

ஆட்பதிவுத் திணைக்களம்

* புதிய, புதுப்பித்தல் மற்றும் தொலைந்த அடையாள அட்டைகளை பெறுவதற்கு பூரணப்படுத்தப்பட்ட   

       விண்ணப்ப படிவத்தினை தொடர்புடைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும்

*   ஏற்கனவே பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை பெறுவதற்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளமுடியும்.

*   அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்குபவர்கள் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

 

8

பதிவாளர் நாயகத் திணைக்களம்

*   காலம்கடந்த பிறப்பு, இறப்புஇ திருமண பதிவுகளை உரிய ஆவணங்களுடன் சமூகமளித்து  சேவைகளை பெற்றுக்கொள்வதுடன் இது தொடர்பான  மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்

 

9

சமூகச் சீர்திருத்த அலுவலகம்

*   சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

 

10

மாகாணக் காணி ஆணையாளர் திணைக்களம்

* அரச காணிகள் தொடர்பில் காணி அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப்பத்திரம் தொடர்பிலான சேவைகளை பெற்றுக்கொள்ளல்.

*   அரச காணி தொடர்பில் ஏதேனும் பிணக்குகள் காணப்படின் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

 

11

மத்தியஸ்த சபை

* மத்தியஸ்தர் சபையினூடாக வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல். (துண்டுப்பிரசுரம் மற்றும் வீடியோ கண்காட்சி)

* ஏதேனும் பிணக்குகள் தொடர்பில் மத்தியஸ்தர் சபை தவிசாளரிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கமுடியும்.

 

12

சிறைச்சாலைத் திணைக்களம்

*   சிறைச்சாலை கைதிகள் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

*   சிறைச்சாலை அலுவலர்களுக்கான தொழில்தகைமை தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளல்

*   கைதிகளை நிகழ்நிலையில் பார்வையிடுவதற்கான அறிமுகம்

 

13

சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு

*   சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறும்.

 pdfic2

14

தொழில் பயிற்சி அதிகார சபை

*   தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் வழங்கப்படும் தொழில் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெறும்

 
மேலும் கடன் இணக்க சபைத் திணைக்களம் ,பனை அபிவிருத்தி சபை ,புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் ஆகிய நிறுவனங்களின் சேவைகளும் இந்நடமாடும் சேவையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

IMG 0845

நீதிக்கான அணுகுவழி முன் ஆயத்த நடமாடும் சேவை எமது பிரதேச செயலகத்தில் இன்று (25.01.2022) ஆம் திகதி நடைபெற்றது.

IMG 0831   IMG 0850    IMG 0858   IMG 0860

1 oli vizha

எமது பிரதேச செயலகத்தில் 29.12.2021 ஆம் திகதி ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றது. இதில் இனிய விருந்தினராக அருட்பணி அருட்செல்வன் அவர்கள், பங்குத்தந்தை, புனித மிக்கேல் ஆலயம், உரும்பிராய் அவர்கள் பங்குபற்றி இந்நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக ஒளியேற்றல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு  மற்றும் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து எமது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடந்து எமது பிரதேச செயலக பிரதேச செயலாளரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.   இனிய விருந்தினரால் நத்தார் செய்தி மொழியப்பட்டது. தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களால் கரோல் கீதங்கள் இயற்றப்பட்டது. இறுதியாக கிறிஸ்மஸ் தாத்தா வருகை தந்து பரிசில்கள் வழங்கப்பட்டது. இறுதியாக நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

2 oli vizha    3 oli vizha    4 oli vizha    5 oli vizha    6 oli vizha    8 oli vizha    11 oli vizha    12 oli vizha  

 

 

IMG 0667பொங்கல் விழா 2022 எமது பிரதேச செயலக முன்றலில் இன்று (18.01.2022) ஆம் திகதி இடம்பெற்றது.

IMG 0697   IMG 0723   IMG 0733   IMG 0769

269912865 426238182563387 8560075790197162300 n
 
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய செம்புலம் மலர் 03 நூல் வெளியீடும் செம்புலம் ஆவணப் பேழை வெளியீடும் எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் 22.12.2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருமதி.ராதிகா சன்சீவன் (உதவி பிரதேச செயலாளர், வலிகாமம் கிழக்கு, கோப்பாய்) தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக திருமதி.சுபாஜினி மதியழகன் (பிரதேச செயலாளர், பண்பாட்டுப் பேரவைத் தலைவர், வலிகாமம் கிழக்கு, கோப்பாய்) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.இம்மானுவேல் ஜோன்சன் (கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலகம் , யாழ்ப்பாணம்) அவர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
 
269812427 426238255896713 6015473801412003408 n 269696540 426238329230039 3056082019312375440 n 269775329 426238885896650 2063438456752231655 n 267506758 426239052563300 8687205359578504164 n 269871732 426238759229996 4021503418735863015 n 269795776 426240255896513 1708674402515722970 n

உட்பிரிவுகள்

News & Events

07
செப்2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
ஆக2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
ஆக2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
ஆக2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top