
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிலிருந்து இடம்பெயர்ந்த மக்களது விடுவிக்கப்படாத காணிகளை அடையாளப்படுத்தும் நிகழ்வு 21.12.2021 மற்றும் 22.12.2021 ஆம் திகதிகளில் எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இணைந்து Google Map இல் அடையாளப்படுத்தினர்.


எமது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களால் அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தில் 22.12.2021 ஆம் திகதி நடைபெற்றது.


சமுர்த்தி வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு எமது பிரதேச செயலகத்தில் 17.12.2021 ஆம் திகதி நடைபெற்றது.


ஒரு கிராமத்தில் ஒரு கைத்தொழில் முயற்சியாளரை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு கைத்தொழில் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு எமது பிரதேச செயலகத்தில் 20.12.2021 ஆம் திகதி நடைபெற்றது.


மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் சந்தை - 2021, 18.12.2021 ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.














