நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் 19 அசாதாரண சூழ்நிலையினால் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் எமது பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நடமாடும் பொருள் விநியோக சேவை வழங்குனர்களினால் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பொருட்கள் விநியோகிக்கப்படும்.
நடமாடும் பொருள் விநியோக சேவை வழங்குனர்களின் விபரம் :




சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் மெச்சுரை வழங்கல் நிகழ்வு எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் 04.03.2021 ஆம் திகதி நடைபெற்றது. இவ் நிகழ்வில் திரு.க.மகேசன் (மாவட்ட செயலாளர் - யாழ்ப்பாண மாவட்ட செயலகம்) மற்றும் திரு.ம.பிரதீபன் (மேலதிக மாவட்ட செயலாளர் - யாழ்ப்பாண மாவட்ட செயலகம்) ஆகியோர் பங்குபற்றி நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்காக அதிகளவான பயனாளிகளை இணைத்த உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்பட பிரதிகள் சில...


73 வது சுதந்திர தினம் 2021.02.04 ம் திகதி காலை 8.30 மணியளவில் எமது பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது. பிரதேச செயலாளாினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடா்ந்து அகவணக்கமும், பிரதேச செயலாளாினால் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியும், மரம் நாட்டுகையும், சிரமதானமும் இடம்பெற்றது.


வடக்கு மாகாண அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் நடாத்தப்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலைய வருடாந்த கண்காட்சி 03.03.2021 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் மு.ப 9.15 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் தலைவராக எமது பிரதேச செயலாளர் திருமதி.சுபாஜினி மதியழகன் அவர்களும் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.நளாயினி இன்பராஜ் (பணிப்பாளர், வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம்) மற்றும் திரு,ந.பஞ்சலிங்கம் (மாவட்ட உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி திணைக்களம்) ஆகியோரும் கலந்து இவ் விழாவினை சிறப்பித்திருந்தனர்.
இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில...




பட்டதாரி / டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் - 2020 - இரண்டாம் கட்டமாக 01.02.2021 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட 24 பயிளுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில

















