ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නමුල් පිටුව
அலுவலக புதிய சிற்றுண்டிச்சாலை பால் காய்ச்சும் நிகழ்வு

அலுவலக புதிய சிற்றுண்டிச்சாலை பால் காய்ச்சும் நிகழ்வு இன்று(04.05.2022) ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

வறுமை கோட்டிற்குட்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர்உணவு பொதி வழங்கல்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமை கோட்டிற்குட்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு பிரதேச செயலக ஒழுங்குபடுத்தலில் உதவிப் பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன், LOLC தனியார் நிதி நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் சக்தி TV அனுசரனையுடனும் எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட புத்தூர் மேற்கு ( J/273 ) கிராம சேவையாளர் பிரிவின் கலைமதி கிராமத்தில் 60 பயனாளிகளுக்கும் மற்றும் புத்தூர் கிழக்கு(J/278) கிராமசேவையாளர் பிரிவின் ஊறணி கிராமத்தில் 100 பயனாளிகளுக்கும் தலா ரூபா 6000 பெறுமதியான உலர்உணவு பொதி இன்றைய தினம் 04.05.2022 காலை 9.00 மணியளவில் குறித்த நிறுவனத்தால் அந்தந்த கிராமசேவையாளர் பிரிவுகளில் வழங்கி வைக்கப்பட்டது.

சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு

பிறந்துள்ள சுபகிருது சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டிற்கான வேலை நாளின் ஆரம்பத்திற்காக இன்று காலை சுப நேரத்தில் 9.05 மணியளவில் எமது அலுவலகத்தில் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளரால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று தொடர்ந்து விசேட பூஜை வழிபாடு செல்வ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.

வீதிப் பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை
வீதிப் பாதுகாப்பு பயிற்சிப்பட்டறையானது எமது பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு 22.03.2022 ஆம் திகதி நிகழ்த்தப்பட்டது.

News & Events
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026
வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026
கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...
பண்பாட்டு பெருவிழா --- 2026
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா < < < < < < < < < <
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026
நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...
රාජ්ය සේවා ස්ථාන
News & Events
අප හා සම්බන්ධවන්න
ප්රාදේශීය ලේකම් කාර්යාලය,
කෝප්පායි,
යාපනය
ශ්රී ලංකාව.
+94 21 223 0011
info@valikamameast.ds.gov.lk




















