
2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு செய்வதற்கான பரீட்சை யாழ் பல்கலைக்கழகத்தில், 2019.12.13 திங்கட் கிழமை யாழ் பல்கலைக்கழகம் மற்றும் யாழ் மாவட்ட விதாதா வள நிலையத்தினாின் அனுசரணையுடன் நடைபெற்றது.
சூாிய கிரகணம் பாா்வையிடும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
மாணவா் தொிவு பரீட்சையில் சித்தி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்"
முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு சமுர்த்தி சமுதாய மட்ட அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் கோப்பாய் பிரதேச விதாத வள நிலையத்தினரின் அனுசரணையுடன் இளம் முயற்சியாளர்களுக்கான அன்பளிப்பு அட்டை தயாாித்தல், மெழுகு வா்த்தி தயாாித்தல் (02.12.2019 தொடக்கம் 04.12.2019 வரை )அச்சுவேலி தெற்கு பிரிவில் இடம்பெற்றது.


அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் 2019.11.26 , 2019.11.28 திகதிகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது.


கோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள யாழ் மாவட்ட புடவை நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 50 சிறு கைத்தொழில்கள் திட்டத்தின் கீழ் 2018 ம் ஆண்டு வழங்கப்பட்ட 20.24 million பெறுமதியான நவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாடு (2019.12.02) திங்கட்கிழமை அன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், பிரதேச செயாளர் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019
(2019.11.22 )வெள்ளிக்கிழமை, (2019.11.25) திங்கட்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அனர்த்தங்களும் அனர்த்தத்தின்போதான முதலுதவிகளும்,பாதுகாப்பான புலம்பெயர்தல், இளைஞர் கழகங்களின் செயற்பாடு, மொழித்திறன் விருத்தி, நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுதொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.















