Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsHome
வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது 11.06.2025 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு இனிதே ஆரம்பமானது.

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது 11.06.2025 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் உயர் திரு சண்முகராஜா சிவஸ்ரீ அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது.
இக்கூட்டத்தில் கௌரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களும், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.



எண்ணீட்டுக் கள உத்தியோகத்தர்களுக்கான ASWASUMA Mobile App தொடர்பான பயிற்சி நெறி
நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் எண்ணீட்டுக் கள உத்தியோகத்தர்களுக்கான அஸ்வசுமா மொபைல் அப் (Aswasuma Mobile App ) தொடர்பான பயிற்சி நெறியானது 09.12.2022 மற்றும் 12.12.2022 ஆம் திகதிகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டு இத்திட்டத்தினை வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்தும் வகையிலும் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் தரவுகளை இலகுவாக தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் நோக்கிலும் அஸ்வசுமா மொபைல் ஆப் தொடர்பான பயிற்சி நெறி இடம் பெற்றது.
இந்நிகழ்வில் எண்ணீட்டுக் கள உத்தியோகத்தர்களான கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு
இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் 19.11.2022 ஆம் திகதி உரும்பிராய் தெற்கு யோகபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

Online மூலம் பொதுமக்களுக்கான சேவை வழங்குவதில் ஆவரங்கால் மற்றும் கோப்பாய் வங்கிகள் தெரிவு செய்யப்பட்டமைக்காக உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

தேசிய ரீதியில் ஆவரங்கால், கோப்பாய் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வங்கிச் செயற்பாட்டில் Manual வேலையினை நிறுத்தி online மூலம் பொதுமக்களுக்கான சேவை வழங்குவதில் ஆவரங்கால் மற்றும் கோப்பாய் வங்கிகள் தெரிவு செய்யப்பட்டமைக்காக உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 08.11.2022 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச்செயற்பாட்டினைச் சிறப்பாக நிறைவேற்றிய வங்கி முகாமையாளர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.





















