2 2

73 வது சுதந்திர தினம் 2021.02.04  ம் திகதி காலை 8.30 மணியளவில் எமது பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது. பிரதேச செயலாளாினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடா்ந்து அகவணக்கமும், பிரதேச செயலாளாினால் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியும், மரம் நாட்டுகையும், சிரமதானமும் இடம்பெற்றது.

3 2 4 2  5 2  6  7  8  9  10  11

IMG 6002

பட்டதாரி / டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் - 2020 - இரண்டாம் கட்டமாக 01.02.2021 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட 24 பயிளுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில

IMG 5995IMG 6000IMG 6003

IMG 5310

பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது 16.01.2021 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் கோப்பாய் பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

முதல் நிகழ்வாக சமுர்த்தியின் சிப்தொர புலமைப்பரிசில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து  சமுர்த்தியின் சௌபாக்கிய வீட்டுத்திட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டது. தொடர்ந்து எமது பிரதேச செயலாளர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தலைமையுரை கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் பிரதேச செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலகத்தால் அடையாளம் காணப்பட்ட தேவைப்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இக் கூட்டத்தில் கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட துறைகளின் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

வீடமைப்பு, இலங்கை மின்சார சபை, விளையாட்டுத்துறை, கைத்தொழில் துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, வீதி அபிவிருத்தி, உள்ளூர் ஆளுகை, நீர்வழங்கல் அபிவிருத்தி, மீன்பிடி அபிவிருத்தி மற்றும் விவசாய அபிவிருத்தி துறைகள் இதில் பங்கு பற்றினர். 

இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில

2   3   4

5

 

8.1

எமது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட பிரிவுபசார விழா 29.01.2021 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2 மணியளவில் எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இதில் எமது அலுவலகத்தில் கடமைபுரிந்து கடந்த ஆண்டு ஓய்வூதியம் பெற்ற அலுவலர்களையும் மற்றும்  ஏனைய பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற அலுவலர்களையும் கௌரவிக்கும் முகமாக இந்நிகழ்வு நடைபெற்றது.

இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில

12.13.14.15.16.19.110.111.1

 

1 2

2021 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல் வைபவத்துடன் இன்று (01.01.2021) காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. தொடர்ந்து உத்தியோகத்தர்களின்  உறுதியுரையும், அதனை தொடர்ந்து பதவிநிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்துரையும் தொடந்து குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரின் கோவிட் 19 தொடர்பான விழிப்புணர்வும் இறுதியாக எமது அலுவலக உத்தியோகத்தர்களின் அனுபவ பகிர்வும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவேறியது.

இந் நிகழ்வு தொடர்பான பதிவுகள் சில...

1 1 1 3 1 4   1 5 1 6 1 7   1 8

 

Subcategories

News & Events

22
Oct2026
மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் கோப்பாய் பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு அவர்களின் நாளாந்த கடமைகளை தாமே மேற்கொள்ளக் கூடிய வகையிலும் அவர்களது இயலாமையினைக் குறைக்க கூடிய வகையிலும் பொருத்தமான உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் கோப்பாய் பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு அவர்களின் நாளாந்த கடமைகளை தாமே மேற்கொள்ளக் கூடிய வகையிலும் அவர்களது இயலாமையினைக் குறைக்க கூடிய வகையிலும் பொருத்தமான உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

பயனாளிகளினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கேற்ப வைத்திய அதிகாரியின் சிபாரிசுடன் மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன. இதில் சாதாரண சற்கரநாற்காலி, நடைச்சட்டகம், ஊன்றுகோல் விசேட இயங்கு திறன் கூடிய சற்கரநாற்காலி என்பன வழங்கி வைக்கப்பட்டன. இத்துடன் வருமானம் குறைந்த நபர்களுக்கான மூக்கு கண்ணாடி, காது கேட்கும் கருவி, செயற்கை அவயம் பொருத்துதல், மூன்று சில்லு வண்டி, கழிவுக்கல நாற்காலி, படுக்கையில் உள்ள விசேட தேவையுடையவர்களுக்கான கட்டில், மெத்தை போன்ற உபகரணங்களும் சமூக சேவைகிளையினால்...

22
Oct2026
கல்வி பயிலும் விசேட தேவை உடைய பிள்ளைக்கு தேவையான பம்பஸ் வழங்கி வைத்தல்.

கல்வி பயிலும் விசேட தேவை உடைய பிள்ளைக்கு தேவையான பம்பஸ் வழங்கி வைத்தல்.

நன்கொடையாளர் ஒருவரின் அன்பளிப்பில் விசேட தேவையுடைய பாடசாலை கல்வியினை தொடங்கும் பிள்ளைக்கு உதவி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் சமூக சேவை உத்தியோகத்தர் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

22
Oct2026
முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026

முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் Fair med நிறுவனத்தின் அனுசரணையுடன் உடுவில் பிரதேச செயலகத்துடன் இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026 ஆம் திகதி அன்று காரைநகர் கசூரினா கடற்கரை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் முதியோர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தமது திறன்களை வெளிப்படுத்தியதுடன் விளையாட்டுக்களிலும் பங்கு பற்றி மகிழ்ந்தனர். இந்நிகழ்வு சமூக சேவை உத்தியோகத்தர்...

« »
Scroll To Top