4

சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'சுரகிமு லங்கா' (இலங்கையை காப்போம்) தேசிய திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அரச வளங்களை மிக சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், தேசிய வலுசக்தி பாதுகாப்பிற்காக பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் பிரதான எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளதுடன் இத் திட்டம் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

'செல்வச் செழிப்புமிக்க நாடு – அழகான வாழ்க்கை' எனும் தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் 'Clean Sri Lanka’ திட்டத்தின் ஒரு பகுதியாக, 'சுரகிமு லங்கா – ஒன்றிணைவோம் – ஒளியூட்டுவோம்' என்ற தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது.

இதற்காக அரச, அரச அனுசரணை மற்றும் தனியார் துறையினருடன் சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்து முடிக்க மக்களை ஊக்குவிப்பதே 'சுரகிமு லங்கா' திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எவ்வித தடைகளும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர் மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரையும் மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மக்களிடையே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தாமாகவே முன்வந்து இத்திட்டத்தில் இணையச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும்.

இன்றைய தினம் (07.05.2026)உற்பத்தித்திறன் செயற்பாடுகள் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கினை பிரதேச செயலாளர் திரு.ஈ.தயாரூபன் அவர்கள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் வளவாளராக மாவட்ட செயலக மனித வள உத்தியோகத்தர் ஸ்ரீ.பவான் அவர்கள் கலந்து கொண்டு உற்பத்தித்திறன் தொடர்பான விழிப்புணர்வினை நிகழ்த்தினார். இதில் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

123

For more images 

IMG 6051

நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் எண்ணீட்டுக் கள உத்தியோகத்தர்களுக்கான அஸ்வசுமா மொபைல் அப் (Aswasuma Mobile App ) தொடர்பான பயிற்சி நெறியானது 09.12.2022 மற்றும் 12.12.2022 ஆம் திகதிகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டு இத்திட்டத்தினை வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்தும் வகையிலும் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் தரவுகளை இலகுவாக தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் நோக்கிலும் அஸ்வசுமா மொபைல் ஆப் தொடர்பான பயிற்சி நெறி இடம் பெற்றது.

இந்நிகழ்வில் எண்ணீட்டுக் கள உத்தியோகத்தர்களான கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

3da5f889 b939 47a9 b910 696ea26eaaf2   45bf3d10 9aea 4173 bbca 64471b8e62a5   c86993cc 97d3 4322 ac4a 1ca099958c1c   dfa9e677 fe8a 40f9 8a2f 3dcb8d240010   IMG 6050

506490322 1020078183576222 7673625188548129901 n

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது 11.06.2025 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் உயர் திரு சண்முகராஜா சிவஸ்ரீ அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் கௌரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களும், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

506399774 1020078246909549 374011460285360415 n506435238 1020078586909515 4741782664391490560 n506445973 1020078810242826 1662849363217133609 n

For more images 

IMG20221119160916இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் 19.11.2022 ஆம் திகதி உரும்பிராய் தெற்கு யோகபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

IMG20221119160852   IMG20221119163758

Subcategories

News & Events

07
Sep2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
Aug2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
Aug2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
Aug2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »
Scroll To Top