நேர்மையான அரச சேவைக்கான "நேர்மை கலாசாரம் -கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய செயல் திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (2026.07.28) நிதி, டிஜிட்டல், தொழில் முயற்சியாண்மை மற்றும் தொழில்நுட்ப நேர்மையை மேம்படுத்தும் நாள்
 
"நேர்மைமிக்க, டிஜிட்டல் அரச சேவை" என்னும் தொனிப்பொருளில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் இணையவழி சந்தைப்படுத்தல் பயிற்சி நெறியானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.07.2026 இன்று நடைபெற்றது. இப் பயிற்சி நெறியில் இன்றைய Digital உலகில் இணையவழி சந்தைப்படுத்தலின் அவசியம் மற்றும் நன்மைகள் தொடர்பாகவும் அதனால் வரும் ஆபத்துக்களை எவ்வாறு குறைக்கலாம் என்பது தொடர்பாகவும் பிரதேச தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களினால் பயிற்சியளிக்கப்பட்டது.

1 1 <

நேர்மையான அரச சேவைக்கான "நேர்மை கலாசாரம் -கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய செயல் திட்டத்தின் முதலாம் நாளான இன்று (2026.07.27) நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள் "சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை" என்ற தொனிப்பொருளில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.ஈ .தயாரூபன் அவர்களால் தேசியக்கொடியானது ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.. தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் எடுத்தனர் அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் நேர்மைக் கலாசாரம் என்ற தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களுக்கான உரையாற்றப்பட்டது. இன்றைய நாள் நிகழ்வுகளின் பதிவுகள் சில...

1 1 <

1 1 <

1 1 <

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச தொழிற்துறைத் திணைக்கள உத்தியோகத்தர் ஒழுங்கமைப்பில் உரும்பிராய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் 14.07.2026, 17.07.2026 ஆகிய இரு நாட்கள் காலை 9.00 மணி தொடக்கம் 3.00 வரை உணவு உற்பத்தி பயிற்சி நெறியானது சிறப்பாக நடைபெற்றது. உரும்பிராய் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் பிரதேச தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வின் வளவாளராக மாவட்ட விதாதா உத்தியோகத்தர் திருமதி கோமதி மாயக்கிருஷ்ணன் ( விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அப் பிரிவு கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச விதாதா வள நிலைய உத்தியோகத்தர் மற்றும் 12 தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இத் தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சி நெறியில் கச்சான் அலுவா, எள் அலுவா, சோளன்மா தொதல், பூந்தி, பனீர், அரிசி சேர் மிக்சர், அரிசி சேர் ரொபி போன்ற பலவகையான உணவு உற்பத்திக்கான பயிற்சிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

1 1 <

தேக ஆரோக்கிய தினத்தையொட்டி (24.07.2026) பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான நடைப்பவனியும், உடற்பயிற்சிகளும் இடம்பெற்றது.

1 1 <

1 1 <

1 1 <

1 1 <

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் கோப்பாய் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய Empower Youth Programme ஆனது 17.07.2026 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளுக்கு CV writing and Interview Behaviours தொடர்பான பல விடயங்களானது செயல் முறைப்பரீட்சைகளுடன் மாவட்ட செயலக மனிதவள வேலைவாய்ப்புத்திணைக்கள இணைப்பாளர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது......

1 1 <

Subcategories

News & Events

07
Sep2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
Aug2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
Aug2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
Aug2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »
Scroll To Top